#BigBreaking || அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி உறுதியானது.! சற்றுமுன் வெற்றியை உறுதி செய்த ஜோ பைடன்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில் 270 ஓட்டுகளை பெறுபவரே அதிபராக முடியும் என்ற நிலையில், நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஜன நாயக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும், அதிபர் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

நேற்று காலை வரை இழுபறியில் இருந்த ஜார்ஜியா, பென்சில்வேனியா, நிவேடா, வட கரோலினா மாகாணங்களில், நிவேடா மாகாணத்தில் ஜோ பைடனும், மற்ற மாகாணங்களில் டிரம்ப் முன்னிலையில் இருந்து வந்தார்.

நேற்று மாலை வெளியான தேர்தல் முடிவுகள் படி, ஜார்ஜியாவில் ஜோ பைடன் 24,49,580 வாக்குகள் பெற்று 1096 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். மேலும் பென்சில்வேனியா, நிவேடா மாகாணங்களிலும் ஜோ பைடன் முன்னிலை முன்னிலை வகித்து வருகிறார். அதிபர் டிரம்ப் தற்போது, வட கரோலினா மாகாணத்தில் மட்டும் முன்னிலை பெற்று வருகிறார். 

இதற்கிடையே ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது. மேலும், ஜோ பைடன் முன்னிலை வகித்து வரும் மாகாணங்களில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், "அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன் என்று ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் சற்றும் அறிவித்துள்ளார். மேலும் அவரின் அந்த அறிவிப்பில், "தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் எனது வெற்றியை உறுதி படுத்துகிறது. அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன். அதுவே எனது கடமை. அனைவருக்கும் சம நிலையில் தருவது நமது ஜனநாயகத்தின் நோக்கம்" என்று அமெரிக்காவின் அடுத்த அதிபர் நான் என்பதை உறுதியாக கூறியுள்ளார்.

இருப்பினும் அவரின் வெற்றி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தபோது வரை 264 தேர்வு குழு உறுப்பினர்கள் வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளார். அவரின் வெற்றிக்கு இன்னும் 6 தேர்வு குழு உறுப்பினர்கள் வாக்குகள் தேவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

joe bidan say i am the winner


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->