ஜப்பான் தெற்கில் மிக அபாயகரமான சுனாமி தாக்கும் - ரியோ டட்சுகி கணிப்பால் அதிரும் உலக நாடுகள்! - Seithipunal
Seithipunal


உலகில் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் தீர்க்கதரிசி நான் என பலர் சொல்லி வருகின்றனர். இவர்களில், பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணிப்புகள் அவ்வப்போது வெளியாகும்.

அதே போல தற்போது ஜப்பானைச் சேர்ந்த ரியோ டட்சுகியும் கவனத்தை ஈர்க்கும் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் நபராக மாறியுள்ளார்.

மங்கு ஓவியராக இருப்பவர் ரியோ, 1980ஆம் ஆண்டு முதல் தனது கனவுகளில் காணும் சம்பவங்களை ஓவியமாக வடிக்கத் தொடங்கினார்.

அதில், பிரெட்டி மெர்குரி மரணம் (1991), கோபே நிலநடுக்கம் (1995), 2011 சுனாமி, கொரோனா (2020) போன்ற பல நிகழ்வுகள் பின்னர் உண்மையாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் அருகே கடலுக்குள் ஏற்படக் கூடிய பெரும் பிளவு, அதன் மூலம் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.

இது 2011ஆம் ஆண்டை விட மூன்றுமடங்கு மோசமாக இருக்கும் என்றும், ஜப்பான் தெற்கில் கடல் கொந்தளிப்பதுபோல் நிலநடுக்கத்துடன் சுனாமியும் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இக்கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக, ஜப்பானுக்கு பயணத்தை திட்டமிட்டிருந்த பலர் முன்பதிவுகளை ரத்து செய்து வருகின்றனர். விமான முன்பதிவுகளில் 83% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஜப்பானில் உள்ள சீன தூதரகம், தங்களின் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஜப்பான் அரசு இதுவரை இதுபற்றி எதையும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

japan Tsunami warn rio Tachugi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->