கார்க் தீவு தாக்குதலுக்கு பதிலடி; 'UAE துறைமுக பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேருங்கள்'; ஈரான் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


கந்தக 28 ஆம் தேதி முதல் இன்று வரை 15 நாட்களாக அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நீடித்து வருகிறது. இன்று ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய பகுதியாக இருக்கும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் கடுங்கோபம் அடைந்து பதில் தாக்குதல் நடத்த ஆயத்தமாகியுள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள துறைமுகங்களை தாக்குதல் நடத்த எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்றும், ஐக்கிய அரபு அமீரகம் மறைவில் அமெரிக்கா பயன்படுத்துகிறது. அதன்மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் என ஈரான் அறிவித்துள்ளது.

குறிப்பாக, துபாயின் ஜெபெல் அலி துறைமுகம், அபு தாபியின் காலிபா துறைமுகம் மற்றும் புஜைரா துறைமுகம் ஆகியவற்றின் அருகில் வசிக்கும் மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பொதுமக்கள் சார்ந்த கட்டமைப்புகளுக்கு இடையே அமெரிக்க ராணுவப் படைகள் நிலை கொண்டிருப்பதாலும், அங்கு மறைந்திருப்பதாலும், இப்பகுதிகள் நியாயமான இலக்குகளாக மாறியுள்ளன வரும் மணிநேரங்களில் இவை இலக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Warns People to Immediately Evacuate UAE Port Areas


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->