82,000 கைதிகளுக்கு பொதுப்பணிப்பு வழங்கிய ஈரான்.!! - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான ஈரானில், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்ட குர்து இனத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி என்ற பெண் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானின் ஆடை கட்டுப்பாட்டு சட்டத்தை எதிர்த்து லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினா் கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டனர்.

மேலும் போராட்டத்தில் 60 சிறுவர்கள் உட்பட 500 பேர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினரால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபடத்திற்காக இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் ரமலான் மாதம் தொடங்கவுள்ள நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 82,656 கைதிகளுக்கு தலைமை மதகுரு அயதுல்லா பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதையடுத்து கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதில் ஆடை கட்டுப்பாடு சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 22000 பேரும் அடங்குவர் என்று நீதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran gives pardon to 82000 prisoners


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->