வீடியோ: நீங்க தொடரைத்தாண்டி கைப்பற்றலாம்., நாங்க உங்க பொண்ணையே கைப்பற்றிட்டோம்ல.!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடந்தது. இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 83 ரன்கள், ஆரோன் பின்ச் 60 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்கள், லபுஸ்சேன் 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 63 ரன்கள் எடுத்து இறுதிவரை அட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு, 389 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி 390  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கி, அதிரடியான தொடக்கத்தைத் கொடுத்தனர். தவான் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, அகர்வால் 28 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது.  36 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் ஆட்டமிழந்தார். கோலியுடன் துணை கேப்டன் கேஎல் ராகுல் இணைந்து அதிரடியாக ஆட தொடங்கினர் ஆட்டம் சூடு பிடித்தது. அரைசதம் கடந்த விராட் கோலி 87 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த போது, ஹென்ரிகஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்த தோல்வியை தழுவியது. 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெட்ரா ஆஸ்திரேலிய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்த பரபரப்பான ஆட்டத்துக்கு மத்தியில், ஆஸ்திரேலிய அணி ரசிகை ஒருவருக்கு, இந்திய அணி ரசிகர் ஒரு தனது திருமண விருப்பம் தெரிவித்து அதில் வெற்றியும் பெற்று விட்டார். இது குறித்தான காணொளியை, "நீங்கள் வேண்டுமானால் தொடரை கைப்பற்றலாம்., நாங்கள் உங்கள் பெண்ணை கைப்பற்றி விட்டோமே"என்ற தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus 2020 love proposal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->