ரஷியாவுக்கு எதையும் விட்டு தரமாட்டேன் - உக்ரைன் அதிபர் மீண்டும் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்..
 

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் பல ஆயிரகணக்கான உயிர்கள் பலியாகினர்.பலர் காயமடைந்தனர்.பல கட்டிடங்கள் சேதமடைந்து நிலைகுலைந்து காணப்படுகிறது.இந்தநிலையில் ரஷியா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.இதற்காக  ரஷிய அதிபர் புதினுடன் வருகிற 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த பேச்சு வார்த்தையில் அமைதி ஒப்பந்தத்தின்படி சில நிலங்களை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டியதிருக்கும். இரு நாடுகளும் நில பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  இந்தநிலையில், ஜெலென்ஸ்கி கூறியதாவது:-உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது. எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும் என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள 30 சதவீதத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் விரும்புகிறார் என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will not give anything to Russia Ukraine President reiterates


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->