ஆளுநர் ஆர்.என் ரவி தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது - திருமாவளவன் அதிரடி.!!
vck leader thirumavalavan announce avoide governor tea party
பொதுவாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில ஆளுநர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
இதைமுன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. இந்த விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில காட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்ததாவது:-
"வழக்கம்போல் ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கம்போல் அந்த விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றுத் தெரிவித்தார்.
English Summary
vck leader thirumavalavan announce avoide governor tea party