உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தாக்க முயன்ற சம்பவம் வெட்கக்கேடானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில், ஒரு வழக்கறிஞர் நீதிபதியை நோக்கி காலணி எறிய முயன்றதோடு, "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என கூச்சலிட்டார். உடனே பாதுகாப்புப் படையினர் அவரை வெளியேற்றினர். இதற்கிடையில், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என்று கூறி, எந்த பரபரப்புமின்றி வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,

* நீதிபதியை தாக்க முயற்சி செய்தது, ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு எதிரான தாக்குதலாகும்.
* இது, அடக்குமுறை மற்றும் ஏற்றத்தாழ்வு இன்னும் சமூகத்தில் நீடிப்பதற்கான சான்றாகும்.
* தலைமை நீதிபதி கருணை, அமைதி, பெருந்தன்மையுடன் நடந்துகொண்டது, நீதித்துறையின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
* நீதிபதி பெருந்தன்மையுடன் புறக்கணித்தாலும், இதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Chief Minister MK Stalin Chief Justice of the Supreme Court


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->