கர்நாடக முதல்வரின் 'மூடா' முறைகேடு தொடர்பான வழக்கு: ரூ.40 கோடி சொத்துகளை முடக்கியுள்ள அமலாக்கத்துறை..!
Enforcement Department freezes assets worth Rs 40 crores in muda scam case
'மூடா' முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம்.
இங்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், 34 அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான தற்காலிக உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது.

அதன்படி, முடக்கப்பட்டிருக்கும் சொத்துகளின் மதிப்பு ரூ. 40.08 கோடி என்று அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் இதுவரை ரூ. 400 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கின் ஏளனவே, ஆணையர் ஜி.டி. தினேஷ் குமாரை அமலாக்கத்துறை செப்டம்பரில் கைது செய்தது. இந்நிலையில், அவர் தற்போது, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Enforcement Department freezes assets worth Rs 40 crores in muda scam case