மதுரை மாநாடு: அதிக உறுப்பினர் சேர்பபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு - திமுக அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு!
DMK Moorthy announce
மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பங்கேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், "இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். அடுத்தடுத்த நிலைகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களில் இருப்பவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
மதுரை வடக்கு மாவட்டம் மாநிலம் முழுவதும் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் முன்னணி மாவட்டமாக இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் திமுக மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டங்களை சிறப்பாக நடத்தியுள்ளோம். அதேபோல், மதுரையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த துணை முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளேன். அவர் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார்; அதை வெற்றிகரமாக நடத்துவோம்.
மேலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்கு நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெற, அனைவரும் இணைந்து உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றார்.