பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும்..? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆருடம்..!
Defense Minister Rajnath Singh said that only God knows what will happen to Pakistan in the future
பாஜ பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான எம்ஜே அக்பர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளதோடு, நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது: தற்போதைய சூழலில் உலகின் 04-வது மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகின்றது. விரைவில் 03-வது நாடாக இந்தியா மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தெற்காசியாவில் உள்ள நாடுகளை நீங்கள் உற்று பார்த்தீர்கள் என்றால், இந்தியா எப்படி ஸ்திரத்தன்மையுடன் உள்ளது என்பதை காணலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்றும் எதிர்காலத்தைப் பற்றி பேச நான் விரும்பவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Defense Minister Rajnath Singh said that only God knows what will happen to Pakistan in the future