கோவையில் ஐயப்ப பகதர்களுக்கு அன்னாதான மண்டபம்... ஐய்யப்பா சேவா சமாஜம் ஏற்பாடு!
In Coimbatore a food donation hall for Ayyappa devotees arranged by Ayyappa Seva Samajam
கோவை சபரிமலை ஐய்யப்பா சேவா சமாஜம் சார்பில் சீசனுக்கு 3.50 லட்சம் பேருக்கு அன்னாதானம் வழங்கும் வகையில் நவக்கரை பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் மண்டபம் அமைக்கப்படவுள்ளது.
சபரிமலை ஐய்யப்பா சேவா சமாஜம் சார்பில் கோவை நவக்கரை பகுதியில் ஐயப்ப பகதர்களுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சீசனுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அன்னாதானம் வழங்கும் வகையில் மண்டபம் கட்டுவது தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் கோவை ஜி என் மில்ஸ் பகுதியில் நடைபெற்றது.
கோவை நவக்கரை நந்தி கோவில் அருகாமையில் கோவை வழியாக சபரிமலை செல்லக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் 1000 பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வகையில் பிரம்மாண்ட அன்னதான மண்டபத்துடன் கூடிய ஐயப்பன் கோவில் கட்டப்பட உள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் கோவை ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமிர்தா வித்யாலயம் ஸ்வாமினி முக்தாமிர்தா பிராணா குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
கோவை சாஸ் அரக்கட்டளை பொதுச்செயலாளர் குமாரபிரசாத் வெரவேற்புரை வழங்கினார். தலைவர் சுந்தரமேனன் தலைமை தாங்கினார். சபரிமலை மற்றும் குருவாயீர் முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ சசி நம்பூதிரி, அமிர்தா வித்யாலயா மேலாளர் ஸ்வாமினி முக்தாமிர்தா பிராணா, அமிர்தா விஸ்வ வித்யாபீடம் தலைமை ஆன்மீக செயல்பாட்டாளர் ஸ்வாமி தபஸ்யாம்ருதானந்தபுரி ஆகியோர் ஆசியுரை வழங்கினர். தேவிதாஸ் வாரியார், பன்னீர் செல்வம், பிரபாகரன், ஜெயராம், கமலா நீலகண்டன் ஆகியோர் வாத்துரை வழங்கினர்.
கோயம்புத்தூர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் கட்டப்பட உள்ள இந்த மண்டபத்தில் மத்திய அரசின் 50 சதவீத மானியத்துடன் சோலார் கிச்சனும் அமைக்கப்படவுள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் அமைய உள்ள இந்த மண்டபம் ஒரு ஏக்கர் பரப்பளவு இடத்தில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ளது.
இங்கு ஒரு சீசனுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக கோவையில் சபரிமலை செல்லும் வழியில் தற்காலிக கூடம் அமைத்து ஐந்தாண்டுகளாக அன்னதானம் வழங்கபப்ட்டு வந்த நிலையில், சொந்தமாக இடம் வாங்கி மண்டபம் கட்டப்படுவதால் விரதம் இருந்து ஐயப்பபை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு முறையான தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்க விரைவாக பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ஜெயக்குமார், பிரபு கண்ணன், வினோத்குமார், ராஜன், கோபகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
In Coimbatore a food donation hall for Ayyappa devotees arranged by Ayyappa Seva Samajam