பாஜக பிரமுகர், நடிகர் வீட்டிற்கு சென்ற பெண்: 'என் பிணம் தான் இங்கிருந்து போகும் என மிரட்டல்: நடந்தது என்ன..?
Bhojpuri BJP actors wife cries when she goes to his house to talk about reconciliation
விவாகரத்து வழக்கில் சமரசம் பேசச் சென்ற மனைவி மீது கணவரே போலீசில் புகார் அளித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஜ்புரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான பவன் சிங்கிற்கும், அவரது மனைவி ஜோதி சிங்கிற்கும் இடையே கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. குடும்ப வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் என பவன் சிங் மீது ஜோதி சிங் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதன்பின்னர், கடந்த மக்களவைத் தேர்தலின் போது இருவரும் சமரசம் ஆனது போலக் காணப்பட்டுள்ளனர். ஆனால், தேர்தல் முடிந்ததும் அவர்கள் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தன்னை அரசியல் ஆதாயத்திற்காக பவன் சிங் பயன்படுத்திக் கொண்டதாக ஜோதி சிங் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஜோதி சிங், லக்னோவில் உள்ள பவன் சிங்கின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சென்றுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேர சந்திப்பிற்குப் பிறகு பவன் சிங் வெளியேறியுள்ளார். அப்போது அவரது சகோதரர் ஜோதி சிங்கை வெளியேறுமாறு கூறியுள்ளார். இதற்கிடையில், பவன் சிங் தனது பாதுகாப்பு கருதி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், ஜோதி சிங்கை அங்கிருந்து வெளியேற்ற முயன்றுள்ளனர்.
அப்போது, ஜோதி சிங் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு, 'நான் என்ன குற்றம் செய்தேன்..?' எனக் கதறி அழுதுள்ளார். அத்துடன், வீட்டின் உள்ளே சென்ற அவர், 'இங்கிருந்து என் பிணம் தான் வெளியே போகும். காவல் நிலையத்திற்கு வரமாட்டேன்' என்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தன்னுடைய கணவர் வீட்டுக்கு வந்த தன் மீதே கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், விவாகரத்து வழக்கில் சமரசம் பேசுவதற்காக ஜோதி சிங் சென்றதாகவும், அப்போது இருவருக்கும் மீண்டும் பிரசிச்னை ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bhojpuri BJP actors wife cries when she goes to his house to talk about reconciliation