பீகார் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானது!
Bihar Assembly elections 2025 NOV DATE ANNOUNCE
பீகார் சட்டசபை தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில், தபால் வாக்குகள் இறுதி இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கணக்கிடப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது. தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 ஆம் தேதி, இரண்டாம் கட்டம் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்.
SIR திருத்த பணிக்குப் பின் பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.92 கோடி ஆண்கள், 3.5 கோடி பெண்கள், மேலும் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் அடங்குவர். அதேபோல், 100 வயதுக்கு மேற்பட்ட 14 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். மொத்தம் 90,712 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நடைபெற அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவொரு வன்முறையும் சகிக்கப்படமாட்டாது எனவும், சமூக வலைதளங்களில் அல்லது பிற தளங்களில் போலி செய்திகளைப் பரப்புவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் அட்டவணை:
நவம்பர் 6 – முதற்கட்ட தேர்தல்
மனுதாக்கல் தொடக்கம் – அக்டோபர் 10
மனுதாக்கல் கடைசி நாள் – அக்டோபர் 17
மனுதாக்கல் பரிசீலனை – அக்டோபர் 18
மனுதாக்கல் திரும்பப் பெறல் – அக்டோபர் 20
நவம்பர் 11 – இரண்டாம் கட்ட தேர்தல்
மனுதாக்கல் தொடக்கம் – அக்டோபர் 13
மனுதாக்கல் கடைசி நாள் – அக்டோபர் 20
மனுதாக்கல் பரிசீலனை – அக்டோபர் 21
மனுதாக்கல் திரும்பப் பெறல் – அக்டோபர் 23
வாக்கு எண்ணிக்கை – நவம்பர் 14.
English Summary
Bihar Assembly elections 2025 NOV DATE ANNOUNCE