திடீரென நின்ற ராட்சத ராட்டினம் - மக்களின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


திடீரென நின்ற ராட்சத ராட்டினம் - மக்களின் கதி என்ன?

கனடா நாட்டில் வாகான் என்ற நகரில் கனடா ஒண்டர்லேண்ட் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் பல்வேறு கேளிக்கைக்கான அம்சங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. 

அந்த வகையில், பூங்காவில் ராட்டினத்தில் அமர்ந்தவர்களை 360 டிகிரிக்கும் மேலும் கீழுமாக சுழற்றிப்போட்டு, உற்சாகமாக அலற வைப்பதால் மக்கள் அதில் ஆர்வத்துடன் ஏறுகின்றனர். இந்த நிலையில், கடந்த சனி கிழமையன்று இரவு 11 மணியளவில் வழக்கம் போல், ராட்டினம் 48 நபர்களுடன் தனது விளையாட்டைத் தொடங்கியது. 

அப்போது, திடீரென ராட்டினத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், ராட்டினத்தில் அமர்ந்திருந்த அனைவரும் 75 அடி உயரத்தில் அமர்ந்தபடி தலைகீழாக தொங்கினார்கள். சுமார் அரை மணி நேரமாக மக்கள் தலைகீழாக தவித்ததில் அதில் பலரும் மயக்கம், வாந்தி, நெஞ்சுவலி என்று அவதிக்கு ஆளானார்கள்.

அதன் பின்னர் தொழில்நுட்ப பிரச்சினை சரிசெய்யப்பட்டதில் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, நெஞ்சுவலி உள்ளிட்ட உபாதை கண்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்தப் பிரச்சனையால் ஆவேசமடைந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கேளிக்கை பூங்காவுக்கு அரசு பூட்டு போட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

giant wheel stopped mid way peoples injured in canada


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->