மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற நபர்.. பிறந்த தினம்! - Seithipunal
Seithipunal


ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்:

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார்.

ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்தச்சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இவர் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தச்சோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தவர். உணவுப் பழக்கங்களே இதற்கு காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.

வில்லியம் மர்பி, ஜார்ஜ் விம்பிள் ஆகியோருடன் இணைந்து, இவர் குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷியஸ் ரத்தச்சோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இதற்காக இவர்களுடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1934ஆம் ஆண்டு பெற்றார்.

வாழ்நாள் முழுவதும் ரத்தச்சோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கிய ஜார்ஜ் மினாட் 1950ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

george minot birthday 2019


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal