குளிக்குற கேப்பில் காசு பார்க்கும் இளைஞர்கள்! இது கூட நல்லா இருக்கே!
Free Surrogate Dad Service Launches in China Girls Show More Interest
வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த பாத் ஹவுஸ் வாடகை அப்பா என்ற ஒரு அறிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (பாத் ஹவுஸ்) ஒன்று Rent a Dad என்ற பெயரில் வாடகை அப்பா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் இலவசமாக செய்துவிடுவார்கள். தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை அப்பாக்கள் கவனித்துக் கொள்வார்கள் . இதன் மூலம் அந்த தாய் நிம்மதியாக குளிக்க முடியும். இந்த சேவைக்கு பலர் வரவேற்ப்பு அளித்துள்ளனர்.
பெண்களுக்கு மட்டும் உள்ள பகுதிகளில், சிறுவர்கள் நுழைவதை தடுப்பதற்காக இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் தன் மகனுடன் இங்கு குளிக்க வந்தால், தன் மகனை அங்கிருக்கும் வாடகை அப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு, நீச்சல் குளத்தில் சுதந்திரமாக நீந்தலாம். அதுவரையில் வாடகைத் தந்தை மகனைக் கவனித்துகொள்வதோடு, குளிப்பதற்கு அழைத்துச் சென்று பார்த்துக்கொள்வார்.
English Summary
Free Surrogate Dad Service Launches in China Girls Show More Interest