அமெரிக்காவில் பயங்கரம் - சாகசத்தில் ஈடுபட்ட விமானத்தில் திடீர் தீவிபத்து - விமான ஓட்டிகளின் கதி என்ன?
fire accident in shows flight america
அமெரிக்காவில் பயங்கரம் - சாகசத்தில் ஈடுபட்ட விமானத்தில் திடீர் தீவிபத்து - விமான ஓட்டிகளின் கதி என்ன?
அமெரிக்கா நாட்டில் உள்ள மிச்சிகன் மாநிலத்தின் வாஷ்டெனா கவுன்டி பகுதியில் உள்ளது சிலான்டி நகரம். இந்த நகரத்தின் கிழக்கே வில்லோ ரன் விமான நிலையம் உள்ளது.
இந்த விமான நிலையத்தில் "தண்டர் ஓவர் மிச்சிகன்" எனும் ஒரு விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் 25வது ஆண்டு விழாவுடன் சாகச நிகழ்ச்சியும் நேற்றும், நேற்று முன் தினமும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு வானில் நடைபெற்ற பலவித விமானங்களின் சாகசங்களை கண்டு ரசித்து வந்தனர். அப்போது உயரே பறந்து கொண்டிருந்த மிக்-23 போர் விமானத்தில் திடீரென புகை வெளிப்பட்டது.
இதைப்பார்த்த விமான ஓட்டிகள் விமானம் விழுந்து விடும் என்று நினைத்து பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தனர். இதையடுத்த சில நொடிகளிலேயே அந்த விமானம் தீப்பிடித்து, வில்லோ ரன் விமான நிலையத்தின் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடுயிருப்பின் வாகன நிறுத்துமிடம் அருகே விழுந்து நொறுங்கியது.
பாராசூட்டில் குதித்த விமானிகள் பத்திரமாக தரையிறங்கினர். இந்த விபத்து நடைபெற்ற சிறிது நேரத்திலேயே தண்டர் ஓவர் மிச்சிகன் அமைப்பு, நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டு விட்டதாக முகநூலில் அறிவித்ததையடுத்து, நிகழ்ச்சியை கண்டுகளிக்க அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கலைந்து சென்றனர்.
இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் ஆராய்ந்து வருகின்றன. இதற்கிடையே பார்வையாளர்கள் இந்த விபத்தின் வீடியோ காட்சியை வைரலாக்கி வருகின்றனர்.
English Summary
fire accident in shows flight america