நடுரோட்டில் தீ பிடித்த பேருந்து - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


நடுரோட்டில் தீ பிடித்த பேருந்து - பயணிகளின் நிலை என்ன?

அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸ் நெடுஞ்சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்தப் பேருந்தின் பின்பக்கத்தில் இருந்து கருகல் வாடையுடன் புகை வந்துள்ளது. 

இதை உணர்ந்த பயணிகள் ஓட்டுனரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு சுதாரித்த  பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தினார்.

அதன் பின்னர் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். பயணிகள் கீழே இறங்கிய ஒரு சில நிமிடங்களில் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. 

இதனால், அந்தப் பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

பின்னர் போலீசார் பேருந்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fire accident at bus in argentina


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->