பெண் பயணிக்கு அடி, உதை; வீடியோ வைரல்!
Female passenger hit kicked Video goes viral
பெண் பயணி ஒருவர் விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்று விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் திட்டி தொடர்ந்து மாறி மாறி கூச்சலிட்ட ரகளையில் ஈடுபட்டார்.
பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது விமானம் புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்று விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றார். அதுமட்டுமல்லாமல் அவர் ஆவேசத்துடன், விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் திட்டி தொடர்ந்து மாறி மாறி கூச்சலிட்ட ரகளையில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த பெண்ணை, விமான பணியாளர் ஒருவர் கீழே தரையில் தள்ளி, சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து அந்த பெண் இருக்கைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மற்றொரு பயணி எழுந்து நின்று சத்தம் போட்டதனால், விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பெண் மற்றொரு பயணியுடன் சேர்த்து விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் விமானம் புறப்படுவதில் 2 மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டதுடன் மற்ற பயணிகளும் அவதியடைந்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி லட்சக்கணக்கானோர் அதை பார்த்தனர்.
English Summary
Female passenger hit kicked Video goes viral