நடைப்பயிற்சி செய்த பெண் ஐடி ஊழியர் - கார் மோதி உயிரிழந்த சம்பவம்.!
female it employee died for car accident in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் தாதர் மதுங்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், ராஜலட்சுமி தினந்தோறும் காலையில் மும்பை நகரில் உள்ள வொர்லி சி பேஸ் சாலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அதன்படி, ராஜலட்சுமி நேற்றும் வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று ராஜலட்சுமி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், ராஜலட்சுமி மீது காரை மோதியது சுமிர் மெர்செண்ட் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
female it employee died for car accident in maharastra