பீதியில் இருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் - அதிரடி காட்டும் நிலநடுக்கம்.!
earthquake in philipines
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடிப்பு, புயல், நிலநடுக்கம் உள்ளிட்டவை பெருமளவில் நடைபெறுவதால் தீவிர பேரிடர் பாதிப்புகளுக்கு ஆளான சர்வதேச நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் கருதப்படுகிறது.

இந்த நிலையில், பிலிப்னைன்ஸ் நாட்டில் மிண்டானோ நகரில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதால், வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரைக்கும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்பு பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.