மியான்மரில் திடீர் நிலநடுக்கம் - அதிகாலையிலேயே அதிரவைத்த சம்பவம்.!
earthquake in miyanmar
கடந்த சில மாதங்களாகவே ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையேயான கண்ட தட்டுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் சக்திவாய்ந்தது முதல் மிதமான நிலநடுக்கங்கள் வரை ஏற்படுகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 6.5 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.53 மணி அளவில் மியான்மர் நாட்டில் 4.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதை உணர்ந்த மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆசியா முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், மக்கள் கடும் அச்சத்திலேயே இருக்கின்றனர்.