காங். சோனியாவின் நண்பாரான ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ள டெல்லி நீதிமன்றம்..!
Delhi court declares arms dealer Sanjay Bhandari an economic offender
பிரிட்டனை சேர்ந்த ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி, காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுல், வாத்ரா ஆகியோருக்கு நெருக்கமானவர். இவர் 2015-இல் இந்தியாவில் வசித்த போது வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதன்படி, அவர் தொடர்புடைய இடங்களில் வருமானத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, 2016-இல் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
குறித்த விவகாரத்தில், 2017 பிப்ரவரியில் சஞ்சய் பண்டாரி மீது, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பில் டில்லி நீதிமன்றத்தில், 202இல் அமலாக்கத் துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதனை தொடர்ந்து, 2023-இல் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வாத்ராவுக்கு சொந்தமான லண்டனில் உள்ள வீட்டை, சஞ்சய் பண்டாரி வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அதை ராபர்ட் வாத்ரா மறுத்தார்.
இந்நிலையில், தப்பியோடிய ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, டில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று, சஞ்சய் பண்டாரியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது.
English Summary
Delhi court declares arms dealer Sanjay Bhandari an economic offender