சுவாசிக்கும் காற்றும் விற்பனையே! இந்த புவியின் மிக தூய்மையான காற்று "டஸ்மேனிய காற்று" பற்றி உங்களுக்கு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை இது மூன்று மட்டுமே கடந்த காலங்களில் மனிதனுக்கு உயிர் வாழ அத்தியாவசியமான அடிப்படை தேவைகளாக இருந்தது.

ஆனால், நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் மனிதனுக்கு உயிர் வாழ சுத்தமான காற்றும், தூய்மையான குடிநீரும்  அத்தியாவசியமான அடிப்படை தேவையாக மாறிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.

இயற்கை வளங்களை அழித்து தான், ஒரு நாடு முன்னேறும் என்ற நிலை உருவாகிவிட்ட இக்காலத்தில், சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகிவிட்டது. 

குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எல்லாம் எட்டி உள்ளது.

வரும் காலங்களில் சுத்தமான காற்றை காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அது எப்போதோ வந்துவிட்டது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

குறிப்பாக உலகின் 100 சதவீதம் தூய்மையான காற்று 'டஸ்மேனியா காற்று' என்ற பெயரில் உலகம் முழுவதும் விற்பனை சூடுபடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு தீர்வு மாநிலமான டஸ்மேனியா மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபக் பகுதிதான் கேப் க்ரிம்.

எட்ஜ் ஆப் வேர்ல்ட் என்று அழைக்கப்படும் இந்த தீபகற்ப பகுதி உலகின் பிற பகுதிகளில் இருந்து தொலைதூரம் இருப்பதாலும், இங்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் மனிதர்கள் அதிகம் செல்ல முடியாது என்பதாலும், மிக மிக தூய்மையான காற்று கிடைக்கிறது.

மேலும் பனி மலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியில் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இந்த பூமியில் மிக மிக தூய்மையான காற்று கிடைப்பதாக காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

கேப் க்ரிம் தீவிலிருந்து கொள்முதல் செய்யப்படும் காற்றை, "டஸ்மேனிய காற்று" என பெயரிட்டு பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதேபோல் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாயின் மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு, 
அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் நை-அலெசுண்ட் பகுதிகளில் கிடைக்கும் சுத்தமான காற்றையும் வியாபாரம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

clean air air Antarctica Australia Tasmania Air


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->