சீனாவில் வேகமெடுக்கும் மா்மக் காய்ச்சல்: இந்தியாவிற்கு பாதிப்பா?
China mysterious fever spreads
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், சீனாவில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் இந்தியாவில் பாதிப்பு குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
சீன குழந்தைகளிடையே ஏவியன் இன்புளுயன்சா வைரஸ் வகை கண்டறியப்படாத காய்ச்சல் காரணமாக சுவாச பிரச்சனைக்கான சூழ்நிலையை கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பரவி வரும் புதிய வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் நிரம்பி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகளின் பாதிப்பு இரண்டிலும் இந்தியாவிற்கான பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
China mysterious fever spreads