புல்லட் ரெயிலில் பயணிக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


புல்லட் ரெயிலில் பயணிக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின்.!

தமிழகத்தின் முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

அதன் படி அவர் முதலில் சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது, ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது; 

"ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்கிறேன். கிட்டத்தட்ட 500 கி.மீ தூரத்தை சுமார் இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; 

இந்த ரெயில் சேவை மூலம் ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin travil bullet train in jappan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->