சீனாவை சேர்ந்த AIIB உடனான தொடர்பை துண்டித்த கனடா அரசு...!
Canada stopped link with AIIB Bank in china
சீனாவின் பீஜிங் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஜி 7 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ளது. மேலும் இது ஆசியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் ஆற்றல் சக்தி, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறைகளுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவியை அளித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உலகளாவிய தகவல் தொடர்புத் தலைவர் கனடாவை சேர்ந்த பாப் பிக்கார்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், இவர் உள் கட்டமைப்பு வங்கியில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள் இருப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியினால் அந்த வங்கி கட்டுப்படுத்தபடுவதாகவும் தெரிவித்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடனான தொடர்பை துண்டிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதில் கனடா அரசாங்கம் வங்கியில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நிறுத்தப்படும் மற்றும் ஏ.ஐ.ஐ.பி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்படும் வரை ஏ.ஐ.ஐ.பியுடன் கனடா தொடர்பில் இருக்காது என கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிக்கார்டின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, ஏ.ஐ.ஐ.பி நிர்வாகத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Canada stopped link with AIIB Bank in china