கனடாவில் சரக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர்! போலீசிடம் சிக்கியது எப்படி? - Seithipunal
Seithipunal


டொராண்டோ: சரக்கு திருட்டில் ஈடுபட்டு வந்த 15 இந்திய வம்சாவளியினரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவில் பீல் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் சரக்கை ஏற்றிச்செல்லும் லாரிகளை வழி மறித்து சரக்குகளை திருடிச் செல்வதை திருட்டு கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது. 

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் நன்கு திட்டமிட்டு பின்பு, அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், சரக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க பீல் பிராந்திய காவல் துறையினர் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சரக்கு திருட்டில் ஈடுபட்டு வந்த 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர் என்பது தெரியவந்துள்ளது. 

அனைவரும் 22 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இவர்கள் மீது 73 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்களிடமிருந்து 6.9 மில்லியன் டாலர் (ரூ.56 கோடி) மதிப்பிலான சரக்குகளும் 2.2 மில்லியன் டாலர் (ரூ.18 கோடி) மதிப்பிலான டிராக்டர் பெட்டிகளும் என, மொத்தம் 9 மில்லியன் டாலர் (ரூ.74 கோடி) மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து பீல் பிராந்திய காவல் துறை தெரிவிக்ககையில், “இந்தத் திருட்டுக் கும்பல் சரக்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அத்துமீறி சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் டிராக்டர்களை ஓட்டி வந்துவிடுகின்றனர். 

சில சமயம், சாலைகளில் சென்றுகொண்டிருக்கும் டிராக்டர்களை பின்தொடர்ந்து அந்த டிராக்டர்களை திருடி விடுகின்றனர். இது போல் பல்வேறு இடங்களில் இவர்கள் திருட்டில் ஈடுபட்டுவந்துள்ளனர்” என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Canada cargo theft involved Indians trapped police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->