ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து! 11 பேர் பலி! விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை!
bus plunges river 11 peoples dead
இலங்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததால் 11 பேர் உயிரிழந்தனர்:
இலங்கை பொலன்ணறுவு கதுருவெலாவில் இருந்து நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்று காத்தான் குடிக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தில் குழந்தைகள் உள்பட மொத்தம் 70 பேர் பயணம் செய்துள்ளார். நடுவழியில் அந்த பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துகொண்டு பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மரண பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்தை மீட்பு படையினர் பல மணி நேரம் போராடி மீட்டெடுத்தனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.
English Summary
bus plunges river 11 peoples dead