பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு! பெண் ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கராச்சி மாகாணத்தில் உள்ள மத வழிபாட்டு தளம் அருகே உள்ள சந்தை பகுதியில் நேற்று இரவு திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb blast in Pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->