நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக முதல்முறை இந்திய-அமெரிக்கர் நியமனம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நியூயார்க்கின் மேன்ஹேட்டன் ஃபெடரல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக மியாமிக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நீதித்துறை நியமனங்களை அங்கீகரிக்கும் செனட் நீதித்துறை கமிட்டி, நேற்று அருண் சுப்ரமணியன் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாக அறிவித்தது. இதற்கு முன்பு செப்டம்பர் 2022-இல் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்தார்.

கடந்த 1979ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் பிறந்த அருண் சுப்பிரமணியன், 2001ல் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மற்றும் 2004இல் கொலம்பியா சட்டப் பள்ளியில் தனது ஜூரிஸ் டாக்டரை (JD) பெற்றார். இவரது பெற்றோர் 1970ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arun Subramanian becomes first Indian American judge of New York district court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->