ட்விட்டர் கணக்கை முடக்கிய எலானை இன்ஸ்டாகிராமில் வெளுத்து வாங்கிய கன்யே வெஸ்ட்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், பல கிராமி விருதுகளை வென்றவர். இவருக்கு நாட்டில் பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் கன்யே வெஸ்ட் தனது டுவிட்டரில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால், எலான் மஸ்க் அவரது கணக்கை இடைநீக்கம் செய்துள்ளார். 

இதையடுத்து கன்யே எலான் மஸ்க்கை விமர்சித்தும், உருவக்கேலி செய்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, 

"எலான் மஸ்க் 'பாதி சீனராக' இருக்க முடியும் என்று நான் மட்டும் நினைக்கிறேனா? அவருடைய சிறுவயது படங்களை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சீன மேதையை அழைத்துச் சென்று தென்னாப்பிரிக்க சூப்பர் மாடலுடன் இணைத்துக்கொண்டால் எலான் மஸ்க் கிடைப்பார். 

இதேபோல், அவர்கள் 10 முதல் 30 எலான்களை உருவாக்கியிருக்கலாம், அவ்வாறு உருவாக்கியதில் இவர் தான் முதல் மரபணு கலப்பினமாகும். அதேசமயம், ஒபாமாவை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது. தேவாலயத்தில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

america rap singer kanye west instagram posted against elon musk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->