அமெரிக்காவில் நேருக்கு நேர் பேருந்து மோதி கோர விபத்து.. 98 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
America bus Accident 98 passengers injured
அமெரிக்காவில் நேருக்கு நேர் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 90 மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இரட்டை மாடி பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து மன்ஹாட்டன் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு பெருந்தும் இது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் பேருந்தில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் முன்பக்க கண்ணாடிகள் சொக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களே விரைவாக மீட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 98 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
English Summary
America bus Accident 98 passengers injured