விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு தலைவர், பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா? பரபரப்பு தகவல்!.
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், உயிரோடு இருப்பதாக, சிங்கள நாளிதழ் வெளியிட்ட செய்தியால் கடந்த ஆண்டு பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் தான் பொட்டு அம்மான். விடுதலைப்புலிகளின் மூளையாக செயலப்பட்ட முக்கிய தலைவர்களில் பொட்டு அம்மான் முக்கியமானவர்.

2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருவதாக சிங்கள நாளிதழ்கள் கூறுகின்றன.

பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக, இலங்கை ராணுவத்தினர் அறிவித்த போதும், அவர் சடலம் மீட்கப்படவில்லை. அவர் இறந்ததற்கான உறுதியான சாட்சியங்களை, இந்தியாவிடம், இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை. இன்னும் மர்மமாகவே உள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகரன் இறந்துவிட்டார் என கூறி ஒரு உடலை காட்டி மக்களை நம்ப வைத்தது இலங்கை அரசு. ஆனால், பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பதற்கு சாட்சியாக அவரது உடலை இலங்கை அரசால் காட்ட முடியவில்லை.
பொட்டு அம்மானின் எல்லா செயல்களும் பிரபாகரனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதனால்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்டார். பிரபாகரனுக்கும் போட்டு அம்மானுக்கும் இடையே ஒரு தடவை கூட கருத்துவேறுபாடு வந்ததில்லையாம் என கூறப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல், பொட்டு அம்மான் தலைமையில் மீண்டும் உளவுப் பிரிவு இயங்கிவருகிறது என எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இண்டர்போல் அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மான் பெயரும் இடம் பெற்று தேடிவருவதாக அறிவித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
alive ltte's major commanders Pottu Amman