வெள்ளத்தில் மூழ்கிய தீவு நாடு.. தற்போது வரை 34 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் வடக்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உலக சுகாதார உணவு நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில் இந்தோனேசியாவில் மேற்கு சுமித்ரா தீவில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

34 peoples died in Indonesia flood


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->