அரசுக்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 12 அப்பாவி மக்கள் பலி..!
12 civilians killed in army firing during protest against Pakistan government
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்ற வன்முறையில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்ட்டுள்ளதோடு, போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 72 மணி நேரமாக, அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன.
இதற்கு முன்னர் கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
12 civilians killed in army firing during protest against Pakistan government