தாய் கண்முன்னே மகளுக்கு நடந்த கொடூரம்: 02 போலீஸ்காரர்கள் பணி நீக்கம்..!
02 policemen suspended for raping daughter in front of mother
நேற்று முன்தினம் இரவு மினி லாரியில் திருவண்ணாமலையில் மணலூர்பேட்டையில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, ஆந்திராவில் இருந்து தாயும், அவருடைய 18 வயது மகளும் தக்காளி ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, நள்ளிரவு மினி லாரி, திருவண்ணாமலையில் உள்ள ஏந்தல் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகிய இருவரும் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இவர்கள் காய்கறி ஏற்றி வந்த மினி லாரி, ரோந்து வந்த இடத்துக்கு வந்தபோது 02 போலீஸ்காரர்களும் அந்த மினி லாரியை நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என கேட்டு மறித்துள்ளனர். அப்போது அவர்கள் காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி ஏற்றிச்செல்வதாக கூறியுள்ளனர். ஆனால், போலீஸ்காரர்கள் அவர்களை கீழே இறங்கும் படி,
கூறியுள்ளனர்.

அப்போது குறித்த போலீஸ்காரர்கள் தாயை மட்டும் விட்டுவிட்டு அவருடைய 18 வயது மகளை விசாரணை செய்ய வேண்டும் என கூறி தங்கள் மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, குறித்த பெண்ணின் தாயார் கூச்சலிட்ட போது, உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்த போது போலீஸ்காரர்கள் அந்த பெண்ணை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, தப்பி சென்றுள்ளனர். அப்போது குறித்த 18 வயது பெண் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியத்தில், இது வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த போலீஸ் டி.ஐ.ஜி.தர்மராஜ் சம்பவம் நடந்த இடத்திலும், மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ரோந்து சென்ற போலீஸ்காரர்களே இளம்பெண்ணை அதுவும் தாயுடன் வந்தவரை அவரது கண்ணெதிரிலேயே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 02 போலீசாரும் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
02 policemen suspended for raping daughter in front of mother