ஆசிய லீ மான்ஸ் தொடர்: அஜித் குமார் புதிய அணி பங்கேற்பு..!
Ajith Kumars new team to participate in the Asian Le Mans Series
நடிகர் அஜித்குமார் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் அதிகம் தீவிரம் காட்டி வருகிறார். இதனையடுத்து, 'அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.
இதில், ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் அணி 03-ஆம் இடம் பிடித்தது.
இந்நிலையில், அஜித் குமார் ரேஸிங் நிறுவனம், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்து கொள்கிறார். அத்துடன், குறித்த தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை, நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.
தற்போது, இந்த கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜித் குமார், நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ‘அஜித்குமார் ரேஸிங்’ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
Ajith Kumars new team to participate in the Asian Le Mans Series