மகளிருக்கு ரூ.5000 உறுதி, திராவிட மாடல் நாட்டுக்கே முன்னுதாரணம் ...! - அவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி
5000 guaranteed women Dravidian model example country Minister Thangam Tennarasu takes action assembly
2026–27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களாக அவை முழுவதும் அந்த அறிக்கையை மையமாகக் கொண்டு தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சட்டசபை அமர்வில் உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட ஆட்சியின் சமூகநீதிக் கொள்கைகளை வலியுறுத்தி பல முக்கிய கருத்துகளை பதிவு செய்தார்.அவர் பேசும்போது, “சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் அரசு இன்று தமிழ்நாட்டை மட்டும் அல்ல, நாட்டுக்கே ஒரு முன்னுதாரணமாக வழிகாட்டுகிறது.

பெரியார் காட்டிய பாதையில் உருவான இந்த ஆட்சி, சமத்துவத்தையும் சமூகநீதியையும் காக்க தொடர்ந்து போராடி வருகிறது. சமூகநீதிக்கு எந்த வகையிலான அச்சுறுத்தலும் வந்தால், தமிழ்நாடு உரத்த குரலில் எதிர்த்து நிற்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், மெட்ரோ ரெயில் மற்றும் ஜல் ஜீவன் போன்ற முக்கிய திட்டங்களுக்கு மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு நிதி வழங்குவதில் தடை செய்துள்ளதாகவும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்த முயன்றால் தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும் தெரிவித்தார்.
“அந்த மக்கள் எழுச்சி இருக்கும் வரை மு.க. ஸ்டாலின் தலைமையே தமிழ்நாட்டை வழிநடத்தும் என்பதற்கான சான்றாகும். மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாட்டிற்கே மாதிரியாக திகழ்கிறது.
மாநிலம் முழுவதும் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.1000 கொடுப்பதைத் தடுக்க நினைத்தால், அதை ரூ.5000 ஆக உயர்த்தத் தயங்கமாட்டோம்” என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை; உலகின் முன்னேறிய நாடுகளுடனும், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் வளர்ச்சிப் போட்டியில் ஈடுபட்டிருக்கிறது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன் மூலம், சமூகநீதி மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் திராவிட மாடல் ஆட்சியின் திசையை அரசு தெளிவாக எடுத்துரைத்தது.
English Summary
5000 guaranteed women Dravidian model example country Minister Thangam Tennarasu takes action assembly