போனியாகாத இட்லி! சோகத்தில் தனுஷ்! இட்லி கடை விமர்சனம்...கன்ஃபார்ம் பேமிலி எண்டர்டைனர்!
Idli that didnot become a pony Dhanush in sadness Idli shop review Confirmed family entertainer
நடிகர் தனுஷ் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் “இட்லி கடை”, இன்று (அக்டோபர் 1) உலகம் முழுவதும் வெளியானது. இது தனுஷின் 52வது படம் என்பதோடு, அவர் இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.
முன்னதாக அவர் இயக்கிய “பவர் பாண்டி” மற்றும் “ராயன்” படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக பவர் பாண்டி படம் மனதைக் கவர்ந்த கிராமத்து கதை எனப் புகழப்பட்டது. இப்போது தனுஷ் அதேபோன்ற உணர்ச்சிமிகு கிராமத்து கதையுடன் மீண்டும் ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.
முன்னோட்டமாக படம் பார்த்த விநியோகஸ்தர்கள் மற்றும் சிலர் கூறுவதன்படி,தனுஷ் மீண்டும் ‘சகலகலா வல்லவன்’ என நிரூபித்துள்ளார்.கதை, திரைக்கதை, நடிப்பு மட்டுமன்றி, பாடல்களையும் எழுதி, சில பாடல்களைத் தானே பாடியுள்ளார்.குறிப்பாக “என் சாமி கூட வரும்” பாடல் பார்வையாளர்களின் மனதைத் தொட்டதாக பாராட்டப்படுகிறது.
படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க வகையில் உருவாகியுள்ளதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கதையும், பாடல்களின் வரிகளும் காட்சிகளுடன் சரியாகப் பொருந்தி, தனுஷின் கிராமத்து கதை சொல்லும் திறமைக்கு ரசிகர்கள் கைகொட்டுவார்கள் என முன்னோட்டப் பார்வையாளர் விமர்சனங்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தில் நித்யா மேனன், சமுத்திரக்கனி, பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“இட்லி கடை” இன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. வெளியீட்டை முன்னிட்டு, தனுஷ் தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் ரசிகர்களை நேரில் சந்தித்து புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னோட்டப் பார்வையாளர் கருத்துகளும், விடுமுறை காலம் என்பதாலும், இந்தப் படம் தனுஷின் வெற்றிப் பட்டியலில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Idli that didnot become a pony Dhanush in sadness Idli shop review Confirmed family entertainer