ரூ.40 கோடி மதிப்பில் போதைப்பொருள் கடத்திய துணை நடிகர்; சென்னை விமான நிலையத்தில் கைது..!
Actor arrested at Chennai airport for smuggling drugs worth Rs 40 crores
பாலிவுட் துணை நடிகர் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வந்து பிடிபட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரை கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத் துள்ளது. அதன்படி, அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது. அந்த விமானத்தில் பயணித்த துணை நடிகர் பிரம்மா (32) என்பவரிடம் ரூ.40 கோடி மதிப்புள்ள மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் துணை நடிகர் விஷால் பிரம்மா, அசாமை சேர்ந்தவர். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ' ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2' படத்தில் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் அவருக்கு நைஜீரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணத்துக்காக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அவர், அதற்காக விடுமுறையில் கம்போடியாவுக்கு செல்வதும், அங்கிருந்து திரும்பும்போது போதைபொருளை பையில் மறைத்து கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது.
English Summary
Actor arrested at Chennai airport for smuggling drugs worth Rs 40 crores