திமுக - காங்கிரஸ் உச்சக்கட்ட மோதல்; ராகுலின் வலது கையாக கருதப்படும் வேணுகோபாலை விமர்சித்த ராஜீவ் காந்தி நண்பர் மணிசங்கர் அய்யர்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழல் கூட்டணி, மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கேட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக திமுக-காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் வலது கையாக இருக்கும் வேணுகோபாலை மணி சங்கர் அய்யர் விமர்சித்திருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.

அதாவது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ஆலப்புழை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி வேணுகோபலை, அதே கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணிசங்கர் ஐயர் ’ரவுடி’ என விமர்சித்துள்ளார். 

அத்துடன், திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள உரசலுக்கு காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபாலும் காரணம் என கூறப்படும் நிலையில், மணிசங்கர் அய்யர் அவரை விமர்சித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கே.சி.வேணுகோபால், தென் இந்திய அளவில் கட்சியின் முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அத்துடன், தமிழக கூட்டணி முடிவுகளை எடுப்பதிலும் வேணுகோபால் முக்கியமானவராக கருதப்படுகிறார். கேரளாவில் முதல்வராகும் கனவுடன் இருக்கும் அவர், தவெகவுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், செவ்வாய்க் கிழமை வேணுகோபால் புதுவை வருகை தர உள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் குறித்தும் அவரிடம், ராகுல் காந்திஅறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், ராகுலின் நண்பர் மற்றும் வலது கையக கருதப்படும் வேணுகோபால் குறித்து கூறியுள்ள கருத்து அரசியல் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajiv Gandhis friend Mani Shankar Aiyar criticizes KC Venugopal


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->