சுவிட்சர்லாந்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; பனி சரிவில் சிக்கிய 80 பேர்; 05 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


சுவிட்சர்லாந்தின் பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்நாட்டின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பயணிகள் ரயில், பிரிக் நகரிலிருந்து புறப்பட்டு, ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த பனியில் சிக்கியுயுள்ளது.

இதன் போது ரெயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தின்போது ரெயிலில் சுமார் 80 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து ஹெலிகாட்பர்களில் வந்த மீட்புப்படையினர் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

உடனடியாக ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், விபத்தில் காயமடைந்த 05 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passenger train derails in Switzerland after avalanche


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->