விண்வெளியில் திருமணம்: 37 வயது பெண்ணை மூன்றாவதாக மணமுடிக்கும் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்!
Tom Cruise 3rd marriage
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் இடையே காதல் தொடர்பு இருப்பதாக சில வாரங்களாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து இருவரும் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் சமீபத்தில், இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் இதுவரை நிச்சயதார்த்தம் செய்யவில்லை. இருந்தாலும் திருமணத்தை முன்னிட்டு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதில் முக்கியமாக, இவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறவுள்ளதாக வெளிவந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம், விண்வெளியில் திருமணம் செய்கிற முதல் ஜோடியாக டாம் குரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் வரலாற்றில் பதிவு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.
63 வயதான டாம் குரூஸ் இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் செய்துள்ளார். தற்போதைய நிலையில், 37 வயதான அனா டி அர்மாஸை நான்காவது மனைவியாகத் தேர்ந்தெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.