ஐசிசி டி20 தரவரிசை: அபிஷேக் சர்மா வரலாற்றுச் சாதனை! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா, ஐசிசி டி20 தரவரிசையில் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். அவர் முதல்முறையாக 931 புள்ளிகளை எட்டி, அதிகபட்ச புள்ளிகளை பெற்ற உலகின் முதல் வீரராக உயர்ந்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கான தரவரிசைகள் ஒவ்வொரு புதன்கிழமையும் வெளியிடப்படுகின்றன. அதன்படி, அக்டோபர் 1 அன்று வெளியான டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா புதிய மைல்கல்லை அடைந்தார்.

ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்காக தாக்குதல்மிகு ஆட்டம் காட்டிய அபிஷேக், முன்பு 900 புள்ளிகளை கடந்திருந்தார். கடந்த வாரம் 907 புள்ளிகள் பெற்ற அவர், தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்ததன் மூலம் டேவிட் மாலன் (919), விராட் கோலி (909), சூர்யகுமார் யாதவ் (912) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 931 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தார்.

25 வயதான அபிஷேக் சர்மா, ஆசியக் கோப்பையில் 44.85 சராசரியுடன் மொத்தம் 314 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார். அவரைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த இலங்கை வீரர் பதும் நிஷங்கா 261 ரன்கள் எடுத்து 5-வது இடத்தைப் பிடித்தார்.

தற்போதைய டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா (931), பில் சால்ட் (844), திலக் வர்மா (819), ஜோஸ் பட்லர் (785), பதும் நிஷங்கா (779) முன்னணி இடங்களில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICC t20 rank Abishek sharma


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->