அடுத்த போட்டிக்கு தயார்.. புதிய ரேஸ் காரை அறிமுகம் செய்த அஜித்!
Ready for the next raceAjith unveiled the new race car
ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அஜித்குமார் அறிமுகம் செய்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார் நடிகர் அஜித் குமார், . ' கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தில் நடிக்கிறார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக சமீபத்தில்அறிவித்தஅஜித் குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்நிலையில், இந்த தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அஜித்குமார் அறிமுகம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை ‘அஜித்குமார் ரேஸிங்’ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
English Summary
Ready for the next raceAjith unveiled the new race car