சூர்யா – ஜோதிகா..என்ன பண்ணாங்க தெரியுமா? சமீரா ரெட்டி நடிகை சொன்ன சீக்ரெட்!
Surya Jyothika do you know what they did Sameera Reddy actress secret
கோலிவுட்டின் ஃபேவரிட் ஜோடிகளில் ஒன்றாகத் திகழும் சூர்யா – ஜோதிகா தம்பதிகள், காதலித்து திருமணம் செய்து இன்றுவரை மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இருவருக்கும் ஒரு மகள் தியா, ஒரு மகன் தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சூர்யா, ஜோதிகா இருவரும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் இணைந்து நடித்தபோதே நெருக்கம் ஏற்பட்டது.
பின்னர் ‘பேரழகன்’, ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்ததால் அவர்களுக்குள் நட்பு காதலாக மாறியது.
ஜோதிகா தனது கரியரில் பிஸியாக இருந்தாலும், சூர்யாவுடன் காதலை முன்னெடுத்தார். இருவரின் காதல் குடும்பத்திற்குத் தெரியவந்தபோது ஜோதிகாவின் வீட்டார் விரைவாக ஒப்புக்கொண்டனர். ஆனால் சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் ஆரம்பத்தில் சம்மதிக்காமல், ஐந்து ஆண்டுகள் கழித்து தான் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய ஜோதிகா, பின்னர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தின் ஆதரவுடன் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.இரண்டாம் இன்னிங்ஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
தற்போது ஜோதிகா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் குடும்பம் மும்பையில் செட்டில் ஆகியுள்ளது.
மேலும், அவர்களின் மகள் தியா ஆவணப்பட இயக்குநராக அறிமுகமாகி, அந்தப் படம் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படும் முயற்சியில் இருக்கிறார்.
சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இணைந்து நடித்த நடிகை சமீரா ரெட்டி, சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.“வாரணம் ஆயிரம் படப்பிடிப்பிற்காக நாங்கள் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்தோம். அப்போது ஜோதிகா கர்ப்பமாக இருந்தார்.சூர்யா தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் இருந்தார்.பிறக்கப்போகும் குழந்தைக்காக பல ட்ரெஸ்களை வாங்கி வைத்தார்.
அவற்றைப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.அந்த தருணம் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த நினைவாக உள்ளது,”என்று சமீரா ரெட்டி உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.
சூர்யா – ஜோதிகா தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்ப பாசம், ரசிகர்களிடையே என்றும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
English Summary
Surya Jyothika do you know what they did Sameera Reddy actress secret