யூடியூபில் வீவ்ஸ் வரல 10 லட்ச ரூபாய் ஸ்டுடியோவைத் தீக்கிரையாக்கிய ஜார்க்கண்ட் இளைஞர்!
YouTube Dreams Up in Smoke Frustrated Creator Torches 10 Lakh Studio
டிஜிட்டல் உலகில் அங்கீகாரம் தேடும் வேட்கை சில நேரங்களில் விபரீத முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் கர்வாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் விநாயக் பிரஜாபதி, தனது பூர்வீகச் சொத்தை விற்றுப் பெரும் பொருட்செலவில் வீட்டிலேயே ஒரு நவீன 'ஹோம் ஸ்டுடியோ' அமைத்தார். யூடியூப் (YouTube) மூலம் சாதிக்கத் துடித்த அவருக்கு, எதிர்பார்த்த அளவு பின்தொடர்பவர்களும் (Followers) ஆதரவும் கிடைக்காததால் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
இந்த விரக்தியின் உச்சத்தில், கடந்த சனிக்கிழமை இரவு தனது ஸ்டுடியோவிற்குள் புகுந்து கதவை இணைத்துக் கொண்ட விநாயக், அங்கிருந்த விலையுயர்ந்த உபகரணங்களுக்குத் தீ வைத்தார். வீடு முழுவதும் புகை சூழ்ந்ததைக் கண்ட குடும்பத்தினர் அலற, அண்டை வீட்டார் உதவியுடன் போலீஸார் விரைந்து வந்து விநாயக் மற்றும் அவர் குடும்பத்தினரைப் பாதுகாப்பாக மீட்டனர். நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும், அவரது உழைப்பால் உருவான சுமார் ₹10 லட்சம் மதிப்புள்ள அதிநவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. சமூக வலைதளப் புகழுக்காகத் தங்களது வாழ்வாதாரத்தைப் பணையம் வைக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், அதன் விபரீத விளைவுகளையும் இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாகப் பிரதிபலிக்கிறது.
English Summary
YouTube Dreams Up in Smoke Frustrated Creator Torches 10 Lakh Studio