பண்டிகைக்கு பூஸ்டர்: மாநிலங்களுக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை விடுவித்துள்ள மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


மாநிலங்களுக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பகிரும் நடைமுறை அரசியல் சட்டப்படி அமலில் உள்ளது. குறிப்பிட்ட சில வரி வருவாயை நியாயமான மற்றும் சமமான அளவில் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில், மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதோடு, பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்கூட்டியே தவணை தொகையை விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீஹாருக்கு ரூ.10,219 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.7,644 கோடியும், மஹாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,123 கோடியும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central government has released Rs1 lakh crore as tax distribution to the states


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->